Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அலட்சியத்தால் நடந்ததா…? குழந்தை பிறந்த உடனே ஏற்பட்ட விபரீதம்… உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

பிரசவத்தின் போது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காட்ராம்பாக்கம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நித்யாவிற்கு மேட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சுகப்பிரசவத்தின் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து நித்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் நித்யாவை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நித்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த நித்யாவின் உறவினர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை முன்பு இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நித்யாவின் உறவினர்கள் மேட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் தான் நித்யாவின் உயிர் பறிபோனதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நித்யாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து நித்யாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |