நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதையும் மீறி இந்திய மாநிலங்கள் கடந்த 2020 -2021 நிதியாண்டில் கூடுதலாக ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி கடன் பெற்றன. இதற்கு மத்திய மாநில அரசுகள் இடையிலான நல்லுறவை காரணம் என்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கு பதிலாக நேரடி பணப் பலன் வழங்குதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டி இருந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.