Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ டைட்டிலில் மறைந்திருக்கும் ரகசியம்… என்ன தெரியுமா?…!!!

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் ‌. தற்போது நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரின் 65-வது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது.

Thalapathy 65 first look / Vijay's 'Beast' poster: Vijay's film with Nelson  Dhilipkumar titled 'Beast'

இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் என்ற டைட்டிலில் நடிகர் விஜய்யின் வயது மறைந்திருக்கும் ரகசியம் பற்றி தெரிய வந்துள்ளது. அதாவது BEAST என்பதை ABCD வரிசையில் எண்களை போட்டு கூட்டினால் விஜய்யின் வயது (47) வருகிறது. B(2)+E(5)+A(1)+S(19)+T(20)= 47  விஜய்யின் வயது.

Categories

Tech |