Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகள் திட்டியதால்… தாயின் விபரீத முடிவு… அடுத்ததடுத்து ஏற்பட்ட உயிரிழப்புகள்…!!

தேனி மாவட்டத்தில் மகள் திட்டியதால் தாய் உயிரிழந்ததையடுத்து மனமுடைந்த மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பள்ளப்பட்டி உள்ள இந்திரா காலனியில் ராக்கம்மாள்(55) மற்றும் அவரது மகள் லோகமணி(32) வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ராக்கம்மாவின் மகன் 12 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்துள்ளார். இதனையடுத்து லோகமணிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ள நிலையில் அவரது கணவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் லோகமணி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து லோகமணியின் தந்தை லோகநாதன் கடந்த ஆண்டு அவரது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் ஏறியபோது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் லோகமணி மற்றும் அவரது தாயார் மிகவும் சோகத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுமாறு லோகமணி அவரது தாயாரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் ராக்கம்மாள் தண்ணீர் ஊற்ற மறந்ததால் லோகமணி அவரை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் அரளி விதையை அரைத்து சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து ராக்கம்மாள் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ள நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஒரே துணையாக இருந்த அம்மாவும் உயிரிழந்ததால் சோகத்தின் உச்சிக்கு சென்ற லோகமணியும் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த அவரது உறவினர்கள் லோகமணி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லோகமணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அடுத்தடுத்து ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருமே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |