பிரான்ஸில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு மாயமான ஒரு பெண்ணை தற்போது காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பிரான்சில் உள்ள Isère என்ற நகரத்தைச் சேர்ந்த பெண் Marie-Thérèse Bonfanti-. இவர் கடந்த 1986 ஆம் வருடம் மே மாதம் மாயமானார். எனவே இது தொடர்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் பல வழிகளில் போராடியும் சிறிய தகவல் கூட கிடைக்காமல் போனது.
இந்நிலையில் சுமார் 35 வருடங்களுக்கு பின்பு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்திருக்கிறது. அந்த பெண்ணின் குடும்பத்தார் இந்த வழக்கை மீண்டும் தொடங்கியுள்ளனர். எனவே காவல்துறையினர் மரபணு சான்றுகளை வைத்து அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். அவரை யாரோ கடத்தி கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.