தமிழகமெங்கும் இருக்கும் சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை கூடங்களை மூடி ஈழ சொந்தங்களுக்கு பாதுகாப்பான வாழ்வையும், கௌரவமான வாழ்க்கையும் தர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 78 ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பட்டினிப்போராட்டம் நடத்தி வரும் செய்தி மிகுந்த மன வேதனையை தருகிறது. கொரோனா பெருந்தொற்று சூழலில் கூட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இல்லாத வதைமுகாம்களில் ஈழ உறவுகளை அடைத்துவைத்து மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
எனவே தமிழகத்திலுள்ள ஈழ சொந்தங்களுக்கு குடியுரிமை தரப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கும் தமிழ்நாடு அரசு, ஈழச் சொந்தங்களை பிணைத்திருக்கும் சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை கூடங்களை உடனடியாக மூட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.