கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருப்பதற்கு மனைவி, கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மன்பாடகன் என்ற பகுதியை சேர்ந்த 30 வயதான பிரவீன் பாட்டில் என்பவரின் மனைவி லட்சுமி பாட்டில். அந்தப் பெண் லட்சுமி ஒரு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார் அவருக்கு மட்டும் சன்னி சாகர் என்ற இரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருந்தது. இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவி மற்றும் அவரது நண்பர்களை கண்டித்துள்ளார். இதையடுத்து அவர் உயிருடன் இருந்தால் நம்மை உல்லாசமாக இருக்க விடமாட்டார் என்று திட்டம் போட்டு கள்ளக்காதலன் அரவிந்தனோடு சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவுசெய்தார் லட்சுமி.
பிறகு கணவன் தூங்கும்போது அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, பிறகு கள்ளக்காதலுடன் உதவியோடு அங்குள்ள ஒரு குப்பைத் தொட்டியில் அவரை போட்டு சென்றுள்ளார். பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவரை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்தனர். குப்பைத் தொட்டியில் அழுகிய நிலையில் பிரவீன் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. மனைவியை அழைத்து விசாரணை செய்ததில் அவர் தனது கள்ளக் காதலனோடு சேர்ந்து இந்த சம்பவத்தை செய்தது அம்பலமானது. பிறகு லட்சுமி மற்றும் அரவிந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.