உசேன் போல்ட் மற்றும் கேசி பென்னட் தம்பதியருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால், அவர்களுக்கு ஜமைக்கா நாட்டின் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஜமைக்கா நாட்டினுடைய ஓட்டப் பந்தய வீரரான மின்னல் வேக மனிதன் என்று அழைக்கப்படும் உசைன் போல்டிற்கும் அவருடைய மனைவியான கேசி பென்னட்டிற்கும் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் உசைன் போல்ட் தற்போது பிறந்த ரெட்டை குழந்தைகளுடனும், தன்னுடைய மூத்த மகளுடனும், தனது மனைவியுடனும் சேர்ந்து குடும்ப புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதன்பின் உசைன் போல்ட் எடுத்த தனது குடும்ப புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து உசைன் போல்ட் பதிவிட்ட அவருடைய குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதற்கிடையே உசைன் போல்ட் மற்றும் கேசி பென்னட் தம்பதியருக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளதால், ஜமைக்கா நாட்டின் பிரதமர் தன்னுடைய வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.