Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்பே வா’ சீரியலில் ‘ரோஜா’ சீரியல் பிரபலங்களா?… வெளியான புரோமோ வீடியோ…!!!

அன்பே வா சீரியலில் ரோஜா சீரியல் பிரபலங்கள் ஸ்பெஷல் ரோலில் நடித்துள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும், சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் உச்சத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் ரோஜா, அர்ஜுன், கல்பனா ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் மூன்று பேரும் அன்பே வா சீரியலில் ஸ்பெஷல் ரோலில் நடித்துள்ளனர். தற்போது அன்பே வா சீரியலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் இந்த எபிசோடை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |