இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை மானபங்கப்படுத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புதூர் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டு மாடியில் இந்த சிறுமி தனது தாயார் மற்றும் சகோதரிகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் சசிகுமார் என்ற வாலிபர் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியின் வாயை பொத்தி மானபங்கம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதற்கிடையில் திடீரென கண்விழித்த சிறுமியின் தாயார் சசிகுமாரை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சசிகுமார் சிறுமியின் தாயாரை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காட்டுப்புதூர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.