ரஷ்ய அதிபர் புடினை ஜெனீவாவில் வைத்து சந்தித்த அமெரிக்க அதிபர் அவருக்கு பரிசு ஒன்றை வழங்கியிருப்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
பல ஆண்டு காலமாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே மோதல்கள் இருந்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்து ஆலோசித்துள்ளனர். அப்போது தனக்கு பிடித்த Randolph கண் குளிர் கண்ணாடியை ரஷ்ய அதிபர் புடினுக்கு ஜோ பைடன் பரிசாக வழங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
மேலும் 23 கரெட் அந்த கண்ணாடியின் கார்னர் தங்க பூச்சால் ஆனது என்றும் அதன் மதிப்பு 299 டொலர் அதாவது இலங்கை மதிப்பில் ரூ. 59,435 ஆயிரம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரச்சாரத்தின் போது இந்த வகையான கண் குளிர் கண்ணாடியை அணிந்து கொண்டு தான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.