திருமணமான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் விஷாலி என்ற இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த இளம் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மேல் படிப்பு படிப்பதற்காக அரக்கோணத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிலிருந்து விஷாலி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இதனை அடுத்து மருந்து வாங்கி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற விஷாலி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விஷாலியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் விஷாலி கிடைக்காததால் அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன விஷாலியை தீவிரமாக தேடி வருகின்றனர்.