Categories
தேசிய செய்திகள்

மணமேடையில் பொண்ணுக்காக காத்திருந்த… மணமகன் செய்த காரியத்தை… நீங்களே பாருங்க…!!!

மணமேடையில் மணமகன் புகையிலை போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் பல மாநிலங்களில் சிகரெட், மது போன்ற பல பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது புகையிலைப் பழக்கம் மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புகையிலையை தொடர்ந்து போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அவர்கள் இருக்கும் இடம் கூட யோசிக்காமல் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

சமீபத்தில் நடந்த திருமண விழாவில் மணமகன், மணமகள் இருவரும் திருமணம் முடிந்து பெரியவர்கள் ஆசீர்வாதம் வாங்க உடையை மாற்றிக் கொள்ள சென்றனர். அப்போது மணமகன் சீக்கிரமாக சென்று உடையை மாற்றி கொண்டு வந்து விட்டார்கள். மணமகள் வருவதற்கு சற்று தாமதமானது. இதையடுத்து காத்திருந்த மணமகன் சட்டைப் பையில் இருந்த புகையிலையை எடுத்து வாயில் போட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பார்த்த பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Categories

Tech |