கர்நாடகா மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள பலாக்கா என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். ஊரடங்கு காரணமாக மாணவ மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் அவர்களுக்கு சரியாக இணைய தொடர்பு கிடைக்காது. இதனால் பல மாணவர்கள் மலை முகடுகள், மரங்கள் மீது அமர்ந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பாடம் பயின்று வருகின்றனர்.
சில இளைஞர்கள் குழுவாக மலையின் உச்சியில் கொட்டகை அமைத்து அங்கு சென்று பாடம் பயின்று வருகின்றனர். நாராயணனின் மகள் ஒரு நாள் இணைய வசதி கிடைக்கும் ஒரு இடத்தில் அமர்ந்து பாடம் பயின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மழை பெய்ய தொடங்கியதால் தனது மகளுக்கு அவர் குடைபிடிக்க அதில் அமர்ந்து அவர் பாடம் பயின்றார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரலானது. இதை அடுத்து அனைவரும் தந்தை-மகள் பாசத்தை பாராட்டி வருகின்றனர்.