நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில், தொற்று குறைந்து வரும் நிலையில் மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை கவனமாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதிக அளவில் தளர்வுகள் கொடுத்தால் மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மக்கள் அதிகளவில் கூடாத வண்ணம் கட்டுப்பாடு விதித்து சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை கண்காணிக்கவேண்டும். மாநில அரசுகள் எக்காரணம் கொண்டும் பரிசோதனைகளை குறைக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.