மூன்றாவதும் பெண் குழந்தையாக இரக்க போகிறது என்பதை அறிந்து மனைவியின் வயிற்றை கத்தியால் குத்தி கிழித்து கருவை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவரின் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ளது. மூன்றாவதாக விஜயலட்சுமி கர்ப்பமானார். மூன்றாவது ஆண் குழந்தையாக பிறக்க வேண்டுமென்று அரவிந்து கூறிவந்துள்ளார். இந்நிலையில் மனைவியின் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பது குறித்து ஸ்கேன் சென்டருக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் மூன்றாவதும் பெண் குழந்தை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் விஜயலட்சுமியிடம் கருவை கலைத்து விடும்படி கூறியுள்ளார்.
இதற்கு விஜயலட்சுமி மறுப்பு தெரிவித்த காரணத்தினால் அவர் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அரவிந்த் அவரது நண்பர்கள் 2 பேரை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்தார். விஜயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தால் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை கலைத்துள்ளனர். பின்னர் விஜயலட்சுமி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்ததும் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விஜயபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரவிந்த் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர். மேலும் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்று கூறுவது சட்டப்படி குற்றமாகும். அப்படிக் கூறிய ஸ்கேன் சென்டரில் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.