Categories
உலக செய்திகள்

போதை தலைக்கேறி ராணுவ வீரர்கள் செய்த கலாட்டா…. பணியிடை நீக்கம் செய்யப்படுவார்களா…? தொடர்ந்து குவியும் குற்றச்சாட்டுகள்….!!

ஹோட்டலில் குடித்துவிட்டு ஹிட்லருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடிய ஜெர்மன் நாட்டின் ராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளார்கள்.

லாத்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளை ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பதற்காக ஜெர்மன் ராணுவ வீரர்கள் லிதுவேனியாவில் முகாமிட்டு தங்கியுள்ளார்கள். இந்நிலையில் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் அருகிலிருக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார்கள். அப்போது ராணுவ வீரர்கள் அளவுக்கதிகமாக மதுவை குடித்து விட்டு போதை தலைக்கேறி செய்வதறியாது ஹிட்லருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடலை பாடியுள்ளார்கள்.

அதோடு மட்டுமின்றி இவர்கள் மீது யூத வெறுப்பு, பாலியல் குற்றச்சாட்டு மற்றும் இன வெறுப்பு போன்றவையும் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கலாட்டாவில் ஈடுபட்ட சுமார் 30 ராணுவ வீரர்களை நாடு திரும்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சினைக்கு மூல காரணமாக இருந்த ராணுவ வீரர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.

Categories

Tech |