கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 70 சதவீதம் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும் இதனுடைய தாக்கம் குறையவில்லை. இதனால் பல்வேறு உலக நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்தி கொள்வதே ஒரே வழி என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பல நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நியூயார்க் நகரில் இதுவரை 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் அந்நாட்டிலுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது. அதோடு நீர்வீழ்ச்சி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதனை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.