Categories
மாநில செய்திகள்

6 ஆகம பள்ளிகளை செயல்படுத்த தயார்…. அமைச்சர் சேகர்பாபு…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் சைவம் மற்றும் வைணவம் என 6 ஆகம பள்ளிகள் இருக்கிறது. அதை புனரமைத்து மீண்டும் செயல்படத் தயாராக இருக்கிறோம். இந்த பள்ளிகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வருவதைப் பொறுத்து ஆகம பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |