Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய கார்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெற்றியூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமான நாகவள்ளி மற்றும் நாகலட்சுமி என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக  ராமமூர்த்தி தனது சொந்த ஊரான வெற்றியூரில் புதியதாக வீடு ஓன்றை கட்டி வருகின்றார். இந்நிலையில் ராமமூர்த்தி, மனைவி, இரு மகள்கள் மற்றும் 4 பேரக்குழந்தைகளுடன் சென்னையிலிருந்து அரியலூரில் புதியதாக கட்டும் வீட்டை காண்பதற்காக காரில் சென்றுள்ளார்.

அப்போது காரானது சாத்தமங்கலம் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று  சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விட்டது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதால் காரின் முன்னால்  அமர்ந்திருந்த ராமமூர்த்தி மற்றும் நாகவள்ளி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து காரில் இருந்த மற்ற அனைவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நாகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் உயிரிழந்த ராமமூர்த்தி மற்றும் நாகவள்ளியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் மருத்துவமனையில் அனுமதித்து  தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒன்பது மாத குழந்தையான ரித்திகா என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |