தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ஜூன் 20ஆம் தேதி இரவு முதல் மீண்டும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி மார்க்கெட்டில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்த வியாபாரமும் , காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெறும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வியாபாரிகள் மட்டுமே காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி என்றும் கூறியுள்ளார்.