Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் 61-வது படத்தை இயக்கப் போவது இவரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் 61-வது படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாயாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். மேலும் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் வலிமை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith Kumar and H.Vinoth | Exciting actor-director combos to look forward  in 2019

இந்நிலையில் நடிகர் அஜித்தின் 61-வது படத்தையும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தில் இரண்டே மாதத்தில் நடித்து முடிக்க அஜித்  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |