Categories
உலக செய்திகள்

மக்களின் கண்முன்னேயே மரண தண்டனையா…? சிறுவர்களைக் கொன்றவர்களுக்கு துப்பாக்கி சூடு…. நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றிய அதிகாரிகள்….!!

சிறுவர்களை கொலை செய்த வழக்கு தொடர்பாக, 3 பேருக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை அதிகாரிகள் பொது மக்களின் முன்பு நிறைவேற்றியுள்ளார்கள்.

ஏமன் நாட்டில் வாழும் Abdullah Ali al Mukhali மற்றும் Mohammed Arman என்ற இருவரும் 8 வயது சிறுமியை சீரழித்ததோடு மட்டுமல்லாமல் கொலையும் செய்துள்ளார்கள். இதனையடுத்து அல்-அமீன் என்பவரது மனைவி அவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அல்-அமீன் அவருடைய மனைவி மீதான கோபத்தில் தன்னுடைய 3 குழந்தைகளையும் கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இவர்கள் 3 பேருமே காவல்துறை அதிகாரிகளின் விசாரணையில் தங்களுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் நீதிமன்றம் இந்த 3 பேருக்கும் மரண தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஏமன் நாட்டின் தலைநகரமான சனாவில் வைத்து காவல்துறை அதிகாரிகள் இந்த 3 பேரையும் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார்கள். அதன்பின் பொதுமக்களின் கண்முன்னேயே குற்றவாளிகள் மூவரையும் மண்டியிடச் செய்து அவர்களின் முதுகில் துப்பாக்கியை வைத்து சுட்டு நீதிமன்றம் விதித்த மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளார்கள்.

Categories

Tech |