நாமக்கல் மாவட்டத்தில் திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் ராமச்சந்திரன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் 8 மாதங்கள் முன்பு சத்யா(32) என்ற பெண்ணுடன் 8 மாதங்கள் முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் ராமசந்திரன் சைக்கிள் ஸ்டாண்டு வைத்து வேலை பார்த்து வருகின்றார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த சத்யா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சத்யாவின் தாயார் வெண்ணிலா ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் திருமணமாகி 8 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதால் நாமக்கல் உதவி கலெக்டர் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கணவரே தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்துள்ளது. மேலும் அவரை கைது செய்து ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.