நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதத்தில் சில்லரை விற்பனை 75 சதவீதம் சரிந்துள்ளது என retailers association of India தெரிவித்துள்ளது. இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் 83 சதவீதம், கிழக்கு பகுதிகளில் 75% மற்றும் தெற்குப் பகுதிகளில் 73 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 49 சதவீதம் சரிவை கண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தளர்வுக்கு பிறகு விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.