உத்தரபிரதேச மாநிலத்தில் தன் தாயுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாயுடன் ஏற்பட்ட சிறிய சண்டையின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனியாக வேலை பார்த்து வாழ்ந்து கொள்ளலாம் என்று அவர் வந்துள்ளார். மும்பைக்குச் சென்று வேலை தேடிக் கொள்ளலாம் என்ற திட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் மும்பைக்கு எப்படி செல்வது என்பது அறியாமல் ரயில்வே நிலையத்தில் திகைத்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஆட்டோ ஓட்டுநரான இம்ரான் என்பவர் இங்கு ஏன் தனியாக நிற்கிறாய் என்று அந்த சிறுமியுடன் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த சிறுமி தான் வேலை தேடிக் மும்பைக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். நான் உன்னை இங்கேயே வேலைக்கு சேர்த்து விடுகிறேன் என்று கூறி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் தனது நண்பர்களுக்கு போன் செய்து அவர்களை வரவழைத்து அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதையடுத்து அங்கிருந்து அந்த சிறுமியை வேறு ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமியை காணவில்லை என்று பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். அப்போது அந்த சிறுமியை கண்டுபிடித்த காவல்துறையினர், சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இம்ரான் மற்றும் அவரது நண்பர்களான 6 பேரை காவல்துறையினர் கைது செய்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.