Categories
உலக செய்திகள்

இனிமேல் வெளிய போகணுனா …. மாஸ்க் தேவையில்லை …. பிரபல நாட்டில் அதிரடி …!!!

பொது மக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை எனபிரான்ஸ் நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இம்மாதம் இறுதி வரை ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட உள்ளதாக பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தற்போது  பிரான்ஸில் கொரோனா  தடுப்பூசி அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அத்துடன்  கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது.

இதனால் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை  10 நாட்களுக்கு முன்பாகவே அதாவது ஜூன் 20 ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். மேலும்  வெளியே செல்லும் பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிவது அவசியமில்லை. நாங்கள் எதிபார்த்ததைவிட நாட்டில் சுகாதாரநிலை முன்னேற்றம் கண்டுள்ளது “,என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார்.பிரான்ஸில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைத்து காணப்படுவதால் பிரான்ஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

Categories

Tech |