Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாலிபரை கத்தியால் வெட்டி…. தப்பி ஓடிய 4 பேர் ….போலீசார் வழக்குப்பதிவு…!!!

இருசக்கர வாகனம் மோதிய தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்துள்ள  வழுதிகைமேடு கிராமத்தை சேர்ந்த அருள் என்பவரின் மகள் சிவப்பிரகாசம். இவர் தன்னுடைய வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது சிவப்பிரகாசம் மீது மோதி உள்ளார். இது குறித்து சிவப்பிரகாசம் கேட்டதற்கு, சஞ்சய் அவரை மிரட்டி உள்ளார்.

சிறிது நேரம் கழித்து சஞ்சய் 3 நபர்களுடன் சிவப்பிரகாசம் வீட்டிற்கு வந்து அவரை தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த சிவப்பிரகாசத்தின் தாயையும் தாக்கியுள்ளனர். இந்த தகராறில் சஞ்சய் , சிவபிரகாசத்தை கத்தியால் வெட்டியுள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை பிடிக்க முயற்சித்த போது அந்த 4 பேரும் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |