Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : வில்லியம்சனை பின்னுக்கு தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்….! விராட் கோலி 4 வது இடத்திற்கு முன்னேற்றம் …!!!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்  தரவரிசை பட்டியலில் விராட் கோலி 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை  பின்னுக்குத் தள்ளி  ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை கைப்பற்றினார். இதில் ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் முதலிடத்திலும் கேன் வில்லியம்சன் 886 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் விராட் கோலியை தவிர்த்து ரோகித் சர்மா ,ரிஷப் பண்ட் இருவரும் தலா  747 புள்ளிகளை பெற்று 6 வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

இதையடுத்து பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 850 புள்ளிகளுடன்  2 வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இதில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 ல் இருக்கும் ஒரே இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் ஆவார். அடுத்ததாக ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியில் ஜடேஜா 386 புள்ளிகள் எடுத்து 2 வது இடத்திலும், அஸ்வின் 353 புள்ளிகள் எடுத்து 4 வது இடத்திலும் உள்ளனர். இதில் 412 புள்ளிகள் எடுத்து ஜேசன் ஹோல்டர் தொடர்ந்து  முதலிடத்தில் நீடிக்கிறார்.

Categories

Tech |