Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது… அடுத்தடுத்து மயங்கி விழுந்த தொழிலாளிகள்… திருப்பத்தூரில் பரபரப்பு…!!

தனியார் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு இருக்கும் கழிவுநீர் தொட்டியை சுத்திகரிக்கும் பணியில் புத்தூர் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ், ரத்தினம் மற்றும் மோதகப்பல்லி கிராமத்தில் வசிக்கும் பிரசாத் ஆகிய 3 தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரமேஷ் கழிவு தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது தீடீரென விஷவாயு தாக்கியதால்  மயக்கம் அடைந்துவிட்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரத்தினமும்,பிரசாந்தும்  அடுத்தடுத்து விஷவாயு தாக்கி அவர்களை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தபோது அவர்களும் மயக்க நிலைக்கு சென்றனர். இதனை அடுத்து சகதொழிலாளிகள் மூவரையும் மீட்டனர்.  ஆனால் விஷவாயு தாக்கியதில் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரத்தினம் மட்டும் பிரசாந்தை சிகிச்சைக்காக மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் உடலை கைப்பற்றிய ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ரமேஷின்  குடும்பத்தினர் உரிய நிவாரண தொகையும், சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு மருத்துவச் செலவும் செய்ய வேண்டும் என தனியார் தோல் நிறுவனத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கூறுவது ரமேஷின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி மற்றும் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனியார் தோல் நிறுவனத்தை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |