Categories
உலக செய்திகள்

தேவையில்லாம எங்க விஷயத்தில தலையிடுதாங்க…. வானில் பறக்கும் 28 போர் விமானம்…. ரோந்து படைகளை தயாராக வைத்திருக்கும் தைவான்….!!

சீனா தற்போது 28 போர் விமானங்களை தங்களுடைய நாட்டை நோக்கி அனுப்பியுள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் நடந்து முடிந்த ஜி-7 மாநாட்டில் தைவான் நாட்டின் நீர் பிரச்சினைக்கு தகுந்த தீர்வினை காண்பதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சீனா தைவான் நாட்டை நோக்கி சுமார் 28 போர் விமானங்களை அனுப்பி அதனை பறக்கச் செய்துள்ளது. இவ்வாறு சீன அரசாங்கம் அனுப்பும் விமானங்களை எதிர்கொள்வதற்கு தைவான், அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் வான்வெளி ரோந்து படைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் தைவான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன நாட்டின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது, சீன நாட்டின் உள் பிரச்சனைகளில் ஜி7 நாடுகள் தேவையின்றி தலையிடுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் சீனா தேசிய இறையாண்மையையும், நாட்டின் மேம்பாடு குறித்த நலன்களையும் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |