தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 80க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக நியமனம். வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை செயலாளராக மகேஸ்வரி நியமனம். வணிகவரி துறையின் இணை ஆணையராக சங்கர்லால் நியமனம். வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணை ஆணையராக சீதாலட்சுமி நியமனம் என மொத்தம் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்..