Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தினால் பசுமாடு பரிசு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமாடு பரிசளிக்கப்படுகிறது. குலுக்கல் முறையில் கிடைக்கும் பசுமாட்டை விற்கவோ கொல்லவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 27 பசுமாடுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 47 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |