Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் இன்று முதல் திறப்பு… குவிந்த சுற்றுலா பயணிகள்…!!!

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹால் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தளங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹால் உள்ளிட்ட நினைவு இடங்களும் மூடப்பட்டிருந்தது. ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 3700 சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது தோற்று குறைந்து வந்த காரணத்தினால் சுற்றுலாத் தலங்களை, வழிபாட்டுத் தலங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகிவற்றை இன்று முதல் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற தாஜ்மகாலை பார்ப்பதற்காக மக்கள் இன்று ஏராளமானோர் வந்திருந்தனர். மேலும் தாஜ்மஹாளுக்குள் ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் எனவும், இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலமாகவே விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

Categories

Tech |