யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .
யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது . இதில் குரூப் ‘எப்’ பிரிவில் உள்ள போர்ச்சுக்கல் – ஹங்கேரி அணிகள் மோதிக்கொண்டன. இதில் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இறுதியாக 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி ஹங்கேரியை தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் போர்ச்சுக்கல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடித்தார்.இந்த போட்டியின் மூலம் யூரோ கோப்பை கால்பந்து வரலாற்றில் 11 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ அதிக கோல்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக பிரான்சின் அணி வீரர் மைக்கேல் பிளாட்டினி 9 கோல்அடித்ததே சாதனையாக இருந்தது. அதோடு 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் .மேலும், போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ மொத்தமாக 106 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.