ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.