அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கிணத்துக்கடவு, குறிச்சி போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குனியமுத்தூர் பகுதியில் இருக்கும் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். அதன்பின் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து குழிதோண்டி குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்த பிறகு அப்பகுதியில் சீராக குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.