Categories
உலக செய்திகள்

1020 குதிரைகளின் திறன்…. ஆரம்ப விலை 95,00,000…. டெஸ்லா நிறுவனத்தின் புதுவகை மின்சாரக் கார்….!!

“டெஸ்லா நிறுவனம்” டெஸ்லா மாடல் எஸ் பிளைட் என்னும் மணிக்கு 321 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புதுவகை மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.

“டெஸ்லா நிறுவனம்” 1020 குதிரைகளின் திறனைக் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் காருக்கு போட்டியாக புதியவகை டெஸ்லா மாடல் எஸ் பிளைட் என்னும் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரை டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை செயல் அலுவலர் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே மேடையில் வைத்து ஓட்டி காட்டியுள்ளார். இந்த புதிய காரின் ஆரம்ப விலை 129999 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பீட்டில் சுமார் 95 லட்சம் ஆகும்.

இந்த காரை ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்ய முடிவு எடுத்த டெஸ்லா நிறுவனம் அதனை செயல்படுத்தியும் உள்ளது. இந்த புதிய டெஸ்லா மாடல் எஸ் ப்ளைட் கார் மணிக்கு அதிகபட்சமாக சுமார் 321 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதனையடுத்து டெஸ்லா நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் காருக்கு போட்டியாகவே இந்த புதிய டெஸ்லா மாடல் எஸ் பிளைட் என்னும் காரை இறங்கியுள்ளது. அதாவது டெஸ்லா மாடல் எஸ் பிளைட் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 627 கிலோமீட்டர் வரை செல்லும்.

ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஒருமுறை சார்ஜ் போட்டால் சுமார் 750 கிலோமீட்டர் வரை செல்லும், என்றாலும் விலை மதிப்பீட்டில் டெஸ்லா நிறுவனம் கார் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது. இதனையடுத்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தினுடைய EQS காரின் விலை இந்திய மதிப்பீட்டில் சுமார் 1.75 கோடியாகும்.

Categories

Tech |