நம்முடைய ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப் பழசாகி விடும் நிலையில் அதில் உள்ள டேட்டாக்களை நீக்காமல் அப்படியே வேறு ஒருவருக்கு விற்று விடுகிறோம். அதன்பிறகு ஹார்ட் டிஸ்க் டேட்டாவை கொண்டு நம்முடைய வங்கி தொடர்பான முக்கிய டேட்டாவை எடுத்து மோசடி செய்யும் நிலை கூட ஏற்படலாம். எனவே நாம் நம்முடைய போன் அல்லது லேப்டாப் விற்பதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நம்முடைய ஸ்மார்ட் போனில் போட்டோக்கள் மட்டுமல்லாமல் வீட்டு முகவரி, வங்கி கார்டு , பான் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய பல முக்கியமான ஆவணங்களை நாம் சேமித்து வைக்கிறோம். அவை தவறான கைக்கு செல்லும் போது பெரும் தீங்கு விளைவிக்கும்.
இதற்கு நாம் முதலில் போன் settings க்கு சென்று போனை ரீசெட் செய்ய வேண்டும். அதில் Factory Re set இந்த விருப்பத்தை கிளிக் செய்யவும் .இதனால் வெவ்வேறு நிறுவனங்களின் போனில் உள்ள விருப்பங்கள் மாறக்கூடும்.
இதேபோன்று லேப்டாப்பில் டேட்டாக்களை விற்பனை செய்வதற்கு முன்னாடி அதில் இருக்கும் டேட்டா முழுவதையும் டெலிட் செய்துவிட்டால் பாதுகாப்பானது என்று கருதக் கூடாது. ஏனென்றால் டேட்டா ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் திரும்ப அனைத்து ஆவணங்களையும் பெற முடியும். இதன்,காரணத்தால் ‘பைல் ஷேர் shredder’ சாஃப்ட்வெர் உதவியாக இருக்கும். http://www.fileshredder.org/ யில் சென்று இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இந்த சாஃப்ட்வெர் பதிவிறக்கம் செய்த பிறகு ஒரு சிறிய விண்டோ திறக்கும். இதில் Add Files, Add Folder மற்றும் ஷார்ட் free டிஸ்க் போன்ற மூன்று option கிடைக்கும். லேப்டாப்யில் உள்ள எல்லா டேட்டாவையும் அழித்த பிறகு , மூன்றாவது விருப்பம் “ஷார்ட் ப்ரீ டிஸ்க் ஸ்பேஸ்” என்பதைத் கிளிக் செய்ய வேண்டும். இது ஹார்ட் டிஸ்க் மற்றும் பிற லொகேஷன் டேட்டாவை நிரந்தரமாக டெலிட் செய்து விடும்.