டென்மார்க், பின்லாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்ற யூரோ கால்பந்து ஆட்டத்தின் நாற்பதாவது நிமிடத்தில் டென்மார்க்கின் எரிக்சன் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் கால்பந்து உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. இந்நிலையில் இன்று தான் நலமாக உள்ளதாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.