Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனிமி’ படத்தின் டீசர் எப்போது ரிலீஸ்?… வெளியான புதிய தகவல்…!!!

விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் .

Vishal says Arya is his most favorite enemy!

வினோத் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எனிமி படத்தின் டீசர் வருகிற ஜூன் 20-ஆம் தேதி ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |