Categories
தேசிய செய்திகள்

அய்யயோ… பறவையை காப்பாற்றப் போன இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் கம்பியில் சிக்கி தவித்த பறவையை மீட்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மால்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடைவீதிக்குச் சென்று கொண்டிருந்தபோது மின்கம்பியில் பறவை ஒன்று சிக்கி தவிப்பதை பார்த்து, சற்றும் யோசிக்காமல் அவர் கீழே கிடந்த குச்சியை எடுத்துக் கொண்டு மின்கம்பம் மீது ஏறி அந்த பறவையை விடுவிக்க ஓங்கி அடித்துள்ளார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் இவர் மீது தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த காட்சிகளை அப்பகுதியில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது பார்ப்போரை மிகவும் பதற வைத்துள்ளது.

Categories

Tech |