Categories
உலக செய்திகள்

“1 இல்ல 2 இல்ல 5 குழந்தைகள்”… தாய் செய்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

ஜெர்மனியில் ஒரு வீட்டில் ஐந்து குழந்தைகள் சடலமாக கிடந்த சம்பவம் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் ஒரு வீட்டில் நடந்த சம்பவம் குறித்து பெண் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு ஒரு வயது முதல் 8 வயது வரை உடைய ஐந்து குழந்தைகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அந்த வீட்டில் குழந்தைகளை தவிர வேறு யாரும் இல்லை. மேலும் சடலமாக கிடந்த அந்த குழந்தைகளுடைய தாய் கிறிஸ்டியானே ( 28 ) தற்கொலைக்கு முயற்சி செய்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

அவரிடம் குழந்தைகளுடைய மரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்தத்தில், தன் பிள்ளைகளை முகமூடி கொள்ளையன் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் அங்கு இல்லை. அத்துடன் உணவிலும், பானங்களிலும் மயக்க மருந்துகள் கலந்து அந்த பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த குழந்தைகளில் சிலர் தலையணையை முகத்தில் அழுத்தியும், தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

மொத்தம் கிறிஸ்டியானே-க்கு ஆறு பிள்ளைகள் இருந்துள்ள நிலையில் ஆறு முதல் எட்டு வயதுடைய இரண்டு மகன்களும், ஒன்று, இரண்டு மற்றும் மூன்று வயதுடைய மூன்று மகள்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் பள்ளிக்கு சென்றிருந்த 11 வயது மகன் மட்டும் உயிர் தப்பியுள்ளார். மேலும் அந்த விசாரணையில் கிறிஸ்டியானேவுக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் முன்னாள் கணவருக்கு புது காதலியுடன் பழக்கம் இருந்ததால் கோபமடைந்த கிறிஸ்டியானே தனது ஐந்து பிள்ளைகளையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிறிஸ்டியானே நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தபட்டுள்ளார்.

Categories

Tech |