பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து இரண்டு நாட்களாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபுர் பக்துங்வா மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பல பகுதிகளிளும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் இடியுடன் கூடிய இந்த கன மழையால் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே 17 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.