பிரெஞ்சு ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் புதிய சாதனை படைத்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்றது . இதில் நேற்று முன் தினம் நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், 5 வது நிலையில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாசை வீழ்த்தி 6-7(6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் 2 வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2016 ம் ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டத்தை பெற்றிருந்தார். இதன் மூலம் ஜோகோவிச் புதிய வரலாறு சாதனையை படைத்துள்ளார்.
கடந்த 52 ஆண்டுகளில் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் குறைந்தது 2 முறை சாம்பியன் பட்டதை வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை ஜோகோவிச் படைத்துள்ளார்.
இவர் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிசில் 9 முறையும் , பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.அதோடு விம்பிள்டனை 5 தடவையும், அமெரிக்க ஓபன் டென்னிசில் 3 முறையும் பற்றி உள்ளார். அத்துடன் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் , நடால் ஆகிய இருவருக்கு அடுத்தபடியாக ஜோகோவிச் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.