Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. இன்று 6.16 லட்சம் தடுப்பூசி தமிழ்நாடு வருகிறது….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஊசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை சரிசெய்யும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் ஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து 6.16 லட்சம் கோவாக்சின் , கோவிஷில்டு தடுப்பூசி டோஸ் இன்று தமிழகம் வர உள்ளது. 1,19,020 கோவாக்சின், 4,97,640 கோவிஷில்டு தடுப்பூசி டோஸ் இன்று வந்த உடனேயே அனைத்து மாவட்டத்திற்கும் பிரித்து வழங்கப்படுகிறது. நாளை முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |