தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. அதன்படி நேற்று 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
இந்நிலையில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்ட ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மதுரை மண்டலம் ரூ.49.54 கோடி, சென்னை மண்டலம் 42 கோடி, சேலம் மண்டலம் 38 கோடி, திருச்சி மண்டலம் 33 கோடிக்கு டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.