புதுச்சேரி மாநிலத்தில் தளங்களுடன் 21ஆம் தேதி வரை ஊரடங்குகை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திலும் ஒவ்வொரு நாளும் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து தொற்று குறைந்து வந்த காரணத்தினால் படிப்படியாக தவறுகளை மாநில அரசு அறிவித்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், புதிய தளர்வுகள் உடன் ஜூன் 21-ஆம் தேதி ஊரடங்குகை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அனைத்து உணவகங்களிலும் மாலை 5 மணி வரை 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அனைத்து ஊழியர்களும் வேலைக்கு வரவேண்டும் என அறிவித்துள்ளது.