அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் தனது வீட்டு மாடி தோட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதில் அயலான் படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
https://twitter.com/Ravikumar_Dir/status/1404348712390840320
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வீட்டில் பெரிய தோட்டம் அமைத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் ‘எங்கள் வீட்டு மாடி தோட்டத்தில்’ என பதிவிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.