2019-20 உயர்கல்வி ஆண்டறிக்கையில் ஆசிரியர்கள் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு குறைவாக உள்ளதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உயர்கல்வித்துறை நிலவரம் குறித்த அறிக்கையை இந்திய ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றது. அதன்படி 2019- 2020 கான ஆண்டறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்களை பார்க்கும்பொழுது உயர் கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு மிக குறைவாக உள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
2014 – 15ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி இந்தியாவில் மொத்தம் உள்ள 14 லட்சத்து 73 ஆயிரத்து 255 ஆசிரியர்கள் பணியிடங்களில் எஸ் சி பிரிவினர் 7.1%, எஸ்டி பிரிவினர் 2.1, முஸ்லிம்கள் 3.2% உள்ளது தெரியவந்தது. 2011ஆம் ஆண்டு எஸ்டி பிரிவினர் 9 சதவீதமும், எஸ்டி பிரிவினர் 8.6 உள்ளனர். முஸ்லிம்கள் 14.2 சதவீதமும் உள்ளது. ஆனால் தற்போது உள்ள புள்ளிவிவரங்களை பார்க்கும் போது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உறுதியளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பெருமளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது அந்த சமூகத்தினருக்கு இழைக்கப்படும் அநியாயம் என்று தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.